| 60 | உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி; உரையால் உணரப்படாத(வ்) அடி;
 வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி; வானவர்கள்
 தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி;
 அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி; அகலம்
 அளக்கிற்பார் இல்லா அடி;
 கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி-கமழ்
 வீரட்டானக் காபாலி(ய்) அடி;
 |