658தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான் தான்
  காண், தூ மலர்ச்சேவடி இணை எம் சோதியான் காண்,
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண்,
     ஒலிகடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண்,
வண்டு படு மலர்க் கொன்றை மாலையான் காண்,
         வாள்மதி ஆய் நாள் மீனும் ஆயினான் காண்
எண்திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
         ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.