700தடுத்தானைத் தான் முனிந்து தன் தோள் கொட்டித்
            தடவரையை இருபது தோள் தலையினாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள ஊன்றி, எழு
                நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு,
கொடுத்தானை, பேரோடும் கூர்வாள் தன்னை;
             குரை கழலால் கூற்றுவனை மாள, அன்று,
படுத்தானை; பள்ளியின் முக்கூடலானை;
               பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.