697நதி ஆரும் சடையானை, நல்லூரானை,
           நள்ளாற்றின் மேயானை, நல்லத்தானை,
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை,
            மறைக்காடு மேயானை, ஆக்கூரானை,
நிதியாளன் தோழனை, நீடூரானை,
         நெய்த்தானம் மேயானை, ஆரூர் என்னும்
பதியானை, பள்ளியின் முக்கூடலானை,
           பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.