699ஊனவனை, உடலவனை, உயிர் ஆனானை,
          உலகு ஏழும் ஆனானை, உம்பர் கோவை,
வானவனை, மதி சூடும் வளவியானை, மலைமகள்
                  முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனை, கயிலாயமலை உளானை, கலந்து
                உருகி நைவார் தம் நெஞ்சினுள்ளே
பானவனை, பள்ளியின் முக்கூடலானை,
             பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.