71 | தெள்ளும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திண்டீச்சுரமும், திருப்புக(ல்)லூர், எள்ளும் படையான் இடைத்தான(ம்)மும், ஏயீச்சுரமும், நல் ஏமம், கூடல், கொள்ளும் இலயத்தார் கோடிகாவும், குரங்கணில் முட்டமும், குறும்பலாவும், கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம்-தம்முடைய காப்புக்களே. |