764உரம் மதித்த சலந்தரன் தன் ஆகம் கீண்ட ஓர்
                 ஆழி படைத்தவன் காண், உலகு சூழும்
வரம் மதித்த கதிரவனைப் பல் கொண்டான் காண்,
           வானவர்கோன் புயம் நெரித்த வல்லாளன் காண்,
அர மதித்துச் செம்பொன்னின் ஆரம் பூணா
    அணிந்தவன் காண், அலைகடல் சூழ் இலங்கை வேந்தன்
சிரம் நெரித்த சேவடி காண் திருப் புத்தூரில்-திருத்
                தளியான் காண்; அவன் என் சிந்தையானே.