| 808 | மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய்; மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்;
 புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய்;
 பூந்துருத்திப் பொய் இலியாய் நின்றான் கண்டாய்;
 அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்;
 ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்;
 குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய்
 கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
 |