809வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்;
              மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்;
போர் ஆர்ந்த மால்விடை ஒன்று ஊர்வான்
        கண்டாய்; புகலூரை அகலாத புனிதன் கண்டாய்;
நீர் ஆர்ந்த நிமிர்சடை ஒன்று உடையான் கண்டாய்;
     நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்;
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய்
           கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.