| 857 | விரிந்தானை; குவிந்தானை; வேதவித்தை; வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான் தன்னை;
 அரிந்தானை, சலந்தரன் தன் உடலம் வேறா; ஆழ்கடல்
 நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்யப்
 பரிந்தானை; பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான்,
 சிலை மலை நாண் ஏற்றி, அம்பு
 தெரிந்தானை; தென் பரம்பைக்குடியில் மேய திரு
 ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.
 |