Try error :java.sql.SQLException: Closed Resultset: next
948எச்சன் இணை தலை கொண்டார்; பகன் கண் கொண்டார்;
              இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக் கொண்டார்;
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்; விறல்
                   அங்கி கரம் கொண்டார்; வேள்வி காத்து,
உச்ச நமன் தாள் அறுத்தார்; சந்திரனை உதைத்தார்;
              உணர்வு இலாத் தக்கன் தன் வேள்வி எல்லாம்
அச்சம் எழ அழித்துக் கொண்டு, அருளும் செய்தார்
                 அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே.