| 151 | இரவன் ஆம்; எல்லி நடம் ஆடி(ய்) ஆம்; எண் திசைக்கும் தேவன் ஆம்; என் உளான் ஆம்;
 அரவன் ஆம்; அல்லல் அறுப்பானும்(ம்) ஆம்;
 ஆகாசமூர்த்தி ஆம்; ஆன் ஏறு ஏறும்
 குரவன் ஆம்; கூற்றை உதைத்தான் தான் ஆம்;
 கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
 கரவன் ஆம்; காட்சிக்கு எளியானும்(ம்) ஆம்; கண்
 ஆம்-கருகாவூர் எந்தைதானே.
 |