251பொன்தாது மலர்க்கொன்றை சூடினான்காண்;
     புரிநூலன்காண்; பொடி ஆர் மேனியான்காண்;
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான்காண்;
    மறை ஓதி காண்; எறிநீர் நஞ்சு உண்டான்காண்;
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான்காண்-;
   இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன் தான்காண்;
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்
    தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.