| | 6.3 திருஅதிகை வீரட்டானம் ஏழைத் திருத்தாண்டகம்
 | 
 | 22 | வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, வெள் ஏற்றினானை,
 பொறி அரவினானை, புள் ஊர்தியானை,
 பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை,
 அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை,
 அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை,
 எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன்
 நான் பண்டு இகழ்ந்த ஆறே!
 | 
 | உரை |