373“தொல்லைத் தொடு கடலே!” என்றேன், நானே;
      “துலங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே;
“எல்லை நிறைந்தானே!” என்றேன், நானே;
    “ஏழ்நரம்பின் இன் இசையாய்!” என்றேன், நானே;
“அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி
               அருள்செய்தாய்!” என்றேன், நானே;
“எல்லை ஆம் ஐயாறா!” என்றேன், நானே; என்று
              என்றே நான் அரற்றி நைகின்றேனே!.