| 463 | ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில் நடம் ஆட வல்லான் தன்னை,
 கூற்றானை, கூற்றம் உதைத்தான் தன்னை, குரை கடல்வாய்
 நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
 நீற்றானை, நீள் அரவு ஒன்று ஆர்த்தான் தன்னை, நீண்ட
 சடைமுடிமேல் நீர் ஆர் கங்கை
 ஆற்றானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
 அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
 |