518அரிச்சந்திரத்து உள்ளார்; அம்பர் உள்ளார்; அரிபிரமர்
                         இந்திரர்க்கும் அரியர் ஆனார்;
புரிச்சந்திரத்து உள்ளார்; போகத்து உள்ளார்; பொருப்பு
                   அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரிச் சந்தி வேட்கும் இடத்தார்; ஏம-கூடத்தார் பாடத்
                              தேன் இசை ஆர் கீதர்;
விரிச்சு அங்கை எரிக் கொண்டு அங்கு ஆடும் வேடர்
                           வீழிமிழலையே மேவினாரே.