543 | பத்திமையால் பணிந்து, அடியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை; எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை; எம்மானை; என் உள்ளத்துள்ளே ஊறும் அத் தேனை; அமுதத்தை; ஆவின் பாலை; அண்ணிக்கும் தீம் கரும்பை; அரனை; ஆதிப்- புத்தேளை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. |