653 | பொறையவன் காண்; பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண்; நண்ணிய புண்டரீகப் போதில் மறையவன் காண்; மறையவனைப் பயந்தோன் தான் காண்; வார்சடை மாசுணம் அணிந்து, வளரும் பிள்ளைப்- பிறையவன் காண்; பிறை திகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |