911 | ஐத் தானத்து அக மிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால யாதொன்றும் இடுவார் இல்லை; மைத் தானக் கண் மடவார் தங்களோடு மாயம் மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்! பைத் தானத்து ஒண்மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய “நெய்த்தானம் நெய்த்தானம்” என்பீர் ஆகில், நிலாவாப் புலால்-தானம் நீக்கல் ஆமே. |