| 931 | வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்; வெய்ய வினைப் பகையும் பைய நையும்;
 எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்; எங்கு எழில் என்
 ஞாயிறு? எளியோம் அல்லோம்
 அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி, அனல் ஆடி, ஆன்
 அஞ்சும் ஆட்டு உகந்த
 செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர்,
 என் சிந்தையாரே.
 |