103முற்றா மதிச் சடையார்; மூவர் ஆனார்; மூஉலகும்
                      ஏத்தும் முதல்வர் ஆனார்;
கற்றார்பரவும்கழலார்;திங்கள்,கங்கையாள்,காதலார்;
                               காம்புஏய்தோளி
பற்று ஆகும் பாகத்தார்; பால் வெண் நீற்றார்;
             பான்மையால் ஊழி, உலகம், ஆனார்;
பற்றார் மதில் எரித்தார்; பைங்கண் ஏற்றார்; பலி
                    ஏற்றார்-பந்தணைநல்லூராரே.