117 | ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து, தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார், கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும் வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. |