166 | தோலின் பொலிந்த உடையார் போலும்; சுடர் வாய் அரவு அசைத்த சோதி போலும்; ஆலம் அமுதுஆக உண்டார்போலும்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனார் போலும்; காலனையும் காய்ந்த கழலார் போலும்; கயிலாயம் தம் இடமாகக் கொண்டார் போலும்; ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. |