| 20 | பாதங்கள் நல்லார் பரவி ஏத்த, பத்திமையால் பணி செய்யும் தொண்டர்தங்கள்
 ஏதங்கள் தீர, இருந்தார்போலும்; எழுபிறப்பும் ஆள்
 உடைய ஈசனார்தாம்-
 வேதங்கள் ஓதி, ஓர் வீணை ஏந்தி, விடை ஒன்று
 தாம் ஏறி, வேதகீதர்,
 பூதங்கள் சூழ, புலித்தோல் வீக்கி, புலியூர்ச்
 சிற்றம்பலமே புக்கார்தாமே.
 |