| 17 | இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகம் ஆய் நின்று, சென்று
 பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான்;
 தன் பெருமையே பேச நின்று,
 மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும்;
 மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்-
 புறம் தாழ்சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச்
 சிற்றம்பலமே புக்கார்தாமே.
 |