| 244 | ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான்காண்; இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன்தான்காண்;
 தூ வணத்த சுடர்ச் சூலப்படையினான்காண்;
 சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான்காண்;
 ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்;
 அனல் ஆடிகாண்; அடியார்க்கு அமிர்து ஆனான்காண்;
 தீவணத்த திரு உருவின் கரி உருவன்காண்-திரு
 ஆரூரான்காண், என் சிந்தையானே.
 |