39 | குழலோடு, கொக்கரை, கைத்தாளம், மொந்தை, குறள்பூதம் முன் பாடத் தான் ஆடு(ம்)மே; கழல் ஆடு திருவிரலால் கரணம்செய்து, கனவின் கண் திரு உருவம் தான் காட்டு(ம்)மே; எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடு(ம்)மே;- ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும் அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே. |