470மாற்றேன், எழுத்து அஞ்சும் என்தன் நாவில்; மறவேன்,
                     திருவருள்கள்; வஞ்சம் நெஞ்சின்
ஏற்றேன்; பிற தெய்வம் எண்ணா நாயேன், எம்பெருமான்
                      திருவடியே எண்ணின் அல்லால்;
மேல்-தான் நீ செய்வனகள் செய்யக் கண்டு, வேதனைக்கே
                      இடம் கொடுத்து, நாளும் நாளும்
ஆற்றேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
               ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.