| 481 | ஏயவன் காண்; எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண்; இன்பன் காண்; துன்பங்கள் இல்லாதான் காண்;
 தாய் அவன் காண், உலகுக்கு ஓர்; தன் ஒப்பு இல்லாத் தத்துவன்
 காண்; உத்தமன் காண்; தானே எங்கும்
 ஆயவன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; அகம்
 குழைந்து, மெய் அரும்பி, அழுவார் தங்கள்
 வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான்
 காண்; அவன் என் மனத்து உளானே.
 |