729 | சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்; சதாசிவன் கண்டாய்; சங்கரன் தான் கண்டாய்; தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய்; சுடர் ஒளி ஆய்த் தொடர்வு அரிது ஆய் நின்றான் கண்டாய்; மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா முனிவர் தம்முடைய மருந்து கண்டாய் கொண்டல் தவழ் கொடி மாடக் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே. |