881வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர் சடை மேல்
                     வைத்து உகந்த மைந்தர் போலும்;
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும்; ஒளி நீறு
                              பூசும் ஒருவர் போலும்;
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர்
                          பெரியார் இல்லை போலும்;
ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த்
                            தான் தோன்றி ஈசனாரே.