6.89 திருஇன்னம்பர் திருத்தாண்டகம் |
878 | அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர் சிந்தை அகலார் போலும்; சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும்; வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும்; எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|