| 923 | காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி,
 கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி, குரை
 கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானும்(ம்) ஆய்,
 நீற்றானாய், நீறு ஏற்ற மேனி ஆகி, நீள் விசும்பு ஆய், நீள்
 விசும்பின் உச்சி ஆகி,
 ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர்
 ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.
 |