533கை வேழ முகத்தவனைப் படைத்தார் போலும்; கயாசுரனை
                     அவனால் கொல்வித்தார் போலும்;
செய் வேள்வித் தக்கனை முன் சிதைத்தார் போலும்; திசை
           முகன் தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும்;
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும்; வியன்
               வீழிமிழலை இடம் கொண்டார் போலும்;
ஐவேள்வி, ஆறு அங்கம், ஆனார் போலும் அடியேனை
                       ஆள் உடைய அடிகள் தாமே.