158ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
                   அழலை மாட்டி; உடனே வைத்து(வ்)
இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்;
     இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்;
அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே
                  ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்;
கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ;
                   கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.