260 | நீர் ஊரும் செஞ்சடையாய்! நெற்றிக்கண்ணாய்! நிலாத்திங்கள்-துண்டத்தாய்! நின்னைத் தேடி, ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து, நின்னைக் காண்பான், தேர் ஊரும் நெடுவீதி பற்றி நின்று, திருமாலும் நான்முகனும், தேர்ந்தும் காணாது, “ஆரூரா! ஆரூரா!” என்கின்றார்கள்-அமரர்கள் தம் பெருமானே! ஆரூராயே!. |