565 | உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி! ஒள் எரி வீசும் பிரானே, போற்றி! படரும் சடைமேல் மதியாய், போற்றி! பல்கணக் கூத்தப்பிரானே, போற்றி! சுடரில்-திகழ்கின்ற சோதீ, போற்றி! தோன்றி என் உள்ளத்து இருந்தாய், போற்றி! கடலில் ஒளி ஆய முத்தே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |