Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.58 திருவலம்புரம்
திருத்தாண்டகம்
581மண் அளந்த மணி வண்ணர் தாமும், மற்றை
           மறையவனும், வானவரும், சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார்; ஒற்றைக்
      கத நாகம் கை உடையார்; காணீர் அன்றே?
பண் மலிந்த மொழியவரும், யானும், எல்லாம்
    பணிந்து இறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல,
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி
         வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.