876 | சேர்ந்து ஓடும் மணிக் கங்கை சூடினானை, செழு மதியும் பட அரவும் உடன் வைத்தானை, சார்ந்தோர்கட்கு இனியானை, தன் ஒப்பு இல்லாத் தழல் உருவை, தலைமகனை, தகை நால்வேதம் ஓர்ந்து ஓதிப் பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை, கள்ளாத அடியார் நெஞ்சில் சேர்ந்தானை, வடதளி எம் செல்வன் தன்னை, சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!. |