165 | பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சு ஆய், பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடு ஒன்று ஆய், விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர்; விரிவு இலாக் குணம் நாட்டத்து ஆறே என்பர்; தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும், எரி ஆய தாமரைமேல் இயங்கினாரும்-இடைமருது மேவிய ஈசனாரே. |