172தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்;
                  திரு ஆரூர் என்றும் உள்ளார்;
வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்;
             மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்;
நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு
     நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும்
ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த
           இடைமருது மேவி இடம் கொண்டாரே.