Try error :java.sql.SQLException: Closed Resultset: next
183மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும், 
    மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்;
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்; இருங்கடல் 
      நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்;
கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை ஆயிரம் 
         ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும்.
புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்-
    பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.