208 | சொல்லானை, சுடர்ப் பவளச் சோதியானை, தொல் அவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற வில்லானை, எல்லார்க்கும் மேல் ஆனானை, மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும் கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை, காளத்தியானை, கயிலை மேய நல்லானை, நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!. |