6.23 திருமறைக்காடு
திருத்தாண்டகம்
232தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய்; தொல்
                   அமரர் சூளா மணிதான் கண்டாய்;
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு
                         ஆற்ற எளியான் கண்டாய்;
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்;
              மெய்ந் நெறி கண்டாய்; விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்-மறைக்காட்டு
                         உறையும் மணாளன் தானே.