233 | கை கிளரும் வீணை வலவன் கண்டாய்; காபாலி கண்டாய்; திகழும் சோதி மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய்; மெய் அடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்; பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்; பராபரன் கண்டாய்; பாசூரான் கண்டாய்; வை கிளரும் கூர்வாள் படையான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |