257 | கரு ஆகி, குழம்பி(இ)இருந்து, கலித்து, மூளைக் கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி, உரு ஆகிப் புறப்பட்டு, இங்கு ஒருத்தி தன்னால் வளர்க்கப்பட்டு, உயிராரும் கடை போகாரால்; மருவுஆகி, நின் அடியே, மறவேன்; அம்மான்! மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல், மறவா வண்ணம்,- திரு ஆரூர் மணவாளா! திருத் தெங்கூராய்! செம்பொன் ஏகம்பனே!- திகைத்திட்டேனே. |