280 | பரியது ஓர் பாம்பு அரைமேல் ஆர்த்தார்போலும்; பாசுபதம் பார்த்தற்கு அளித்தார்போலும்; கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார்போலும்; காபாலம் கட்டங்கக் கொடியார்போலும்; பெரியது ஓர் மலை வில்லா எய்தார்போலும்; பேர் நந்தி என்னும் பெயரார்போலும்; அரியது ஓர் அரணங்கள் அட்டார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |