311செடி ஏறு தீ வினைகள் தீரும் வண்ணம்
            சிந்தித்தே, நெஞ்சமே! திண்ணம் ஆகப்
“பொடி ஏறு திருமேனி உடையாய்!” என்றும்,
    “புரந்தரன் தன் தோள் துணித்த புனிதா!” என்றும்,
“அடியேனை ஆள் ஆகக் கொண்டாய்!” என்றும்,
          “அம்மானே! ஆரூர் எம் அரசே!” என்றும்,
“கடி நாறு பொழில் கச்சிக் கம்பா!” என்றும்,
          “கற்பகமே!” என்று என்றே, கதறா நில்லே!.