6.34 திருஆரூர்
திருத்தாண்டகம்
340ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ? ஓர்
            உருவே மூ உருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?
    காமனையும் கண் அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த
 நாளோ? மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ?
        திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.